முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Tuesday, October 16, 2007

தமிழ் சிங்களத் திரைப்படம்

"ஏ நைன் பாதை" இது ஏ 9 பாதை திறக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட திரைப்படம். சிங்களத் தமிழ் இருமொழி திரைப்படம். இத்திரைப்படத்தில் தமிழர் பாத்திரங்களுக்கு தமிழர்களும், சிங்கள பாத்திரங்களுக்கு சிங்களவர்களும், முஸ்லீம் பாத்திரங்களுக்கு முஸ்லீம்களுமாக முவ்வினத்தவரும் ஒன்றாக நடித்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் நடிப்பு இந்திய சினிமா சாயலற்று, யதார்த்தமாக உள்ளது. ஆனால் திரைப்படத்தின் மூலக்கதை சிங்கள பக்கச் சார்புடையதாகவே உள்ளது.

போரின் கோரப்பிடிக்குள் உடைந்து சிதைந்து போயிள்ள கட்டிட எச்சங்களை அருமையாகக் காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளனர். அவற்றைப் பார்க்கும் போது எமது மனமும் உடைந்து சிதைந்து போகின்றது.

மேலும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்கள்.இங்கே இப்படத்தை காணமுடியவில்லையெனில் கீழுள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

http://video.google.com/videoplay?docid=8140779693628308422&hl=en

No comments: