முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Tuesday, October 16, 2007

செருப்பு (குறும்படம்)

இராணுவப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பிரதேசம். அங்கே மீள் குடியேறும் மக்கள். அவர்கள் நிலங்களில் எல்லாம் கால் வைக்கமுடியாதப் படி கண்ட இடங்களிலெல்லாம் விதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள். யுத்தத்தால் அனைத்தையும் இழந்து, தொழில் வாய்ப்புமின்றி, யுத்தத்தின் கோரப்பிடிக்குள்ளும் வறுமைப் பிடிக்குள்ளும் சிக்குண்டு அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலம். இந்தப் பின்னனியுடன் தொடர்கிறது கதை.

சக மாணவ மாணவிகளைப் பார்த்து தனக்குமொரு சோடி செருப்பு வேண்டித்தரும் படி கூறும் மகள். வறுமை பிடிக்குள்ளும் தனது மகளுக்காக உழைத்து செருப்பு வேண்டிவரும் தகப்பன். கடைசியில் செருப்பு வேண்டி வருவதை அறிந்து ஆசையுடன் தந்தையிடம் ஓடும் மகளை, காணியில் புதையுண்டுக் கிடந்த நிலக் கண்ணிவெடி பதம் பார்க்கிறது.

காலையிழந்து செருப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடையும் சிறுமியின் நடிப்பு மனதை நெகிழவைக்கின்றது.

பகுதி 1
பகுதி 2

3 comments:

சுல்தான் said...

இலங்கைத் தமிழர்கள் வாழ்வின் அவலத்தை உணர்த்தும் அருமையான குறும்படம்.
கொலைகாரர்கள் ஒவ்வொரு வாசலுக்கும் வெளியே தலைமறைவாய்.
அந்த சிறுமி இயல்பாக நடித்திருக்கிறது.

வடுவூர் குமார் said...

இதை முதலில் பார்பதா?வேண்டாமா? என்ற தயக்கத்துடன் தான் பார்த்தேன்.
எளிமையாக மிகவும் சிறப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்/நடிகர்கள்.
கதையின் கரு முதலிலேயே சொல்லப்பட்டு விட்டதால் "வெடிப்பு" எங்கு வரும் என்ற பதைபதைப்புடன் பார்க்கவேண்டி இருந்தது.
உண்டியில் இருந்து பணம் எடுக்கும் காட்சி - அவர்கள் வறுமையை எளிமையாக காட்டிவிடுகிறது.
இந்நிலையில் இன்னும் மக்கள் நமக்கு பக்கத்து நாட்டிலேயே இருக்கிறார்களே என்று மனம் கனக்கிறது.

Anuradha said...

Very good movie. Not only as a movie but as a reality. Its so painful to see how people are struggling. When we are fighting for life's luxury things we have people next to us who are struggling for the very basic things in their life.