
இந்நிலையில் "ஹொங்கொங் இளம் இந்திய நண்பர்கள் குழு" (Young Indian Friends Club - YIFC) எனும் பெயரில் இயங்கி வந்த ஒரு குழுவினரால், தாய்மொழி கல்வியான தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது.
இது ஹொங்கொங்கில் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
ஹொங்கொங் தமிழ்மொழி கல்வி
--------------------------------------------------------------------------

இதனை ஈடுசெய்யும் முகமாகவே 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் "இந்திய இளம் நண்பர்கள் குழு" (Young Indian Friends Club - YIFC) எனும் அமைப்பினரால், தமிழ்மொழி கல்வி கற்பிக்கும் திட்டம் ஆரம்பமானது. இதுவே ஹொங்கொங் தமிழர் வரலாற்றில் முதன்முதலான தமிழ்மொழி கற்பிக்கும் திட்டமாகும். எனவே இத்திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவே கொள்ளவேண்டும்.

இந்நிலையில் ஹொங்கொங் வாழ் தமிழ் குழந்தைகளுக்கு, தாய் மொழியாம் தமிழ்மொழியை கற்பிக்கும் திட்டத்தை மேற்கொண்ட, தமிழ் மொழி ஆர்வலர்களின் தன்னார்வ முயற்சி, ஹொங்கொங்கில் தமிழ் மொழி செழிக்க விதைத்த விதையாகும். இது வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடையே காலப்போக்கில் தமிழ் மொழி சார்ந்த பலத்திட்டங்களுக்கும் முன்னெடுப்புக்களுக்கும் வழிவகுக்கலாம்.
இனி ஹொங்கொங் தமிழ் மொழி கல்வி வகுப்புக்கள் எவ்வாறு நடைப்பெறுகின்றன, பாடங்கள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன, குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் எனபவற்றைப் பார்ப்போம்.
அலாவுதீன் உணவகத்தில் வகுப்புகள்
--------------------------------------------------------------------------

இந்த தமிழ்மொழி வகுப்புக்கள் ஆரம்பத்தில்; சிம் சா சுயி, சுங்கிங் மென்சன் எனும் கட்டிடத்தில், அலாவுதீன் எனும் உணவகத்தில் சனிக்கிழமை மாலை நேர வகுப்புகளாக ஆரம்பமாகின.
யமா ட்டேய் சமூகக் கூடத்தில் வகுப்புகள்
--------------------------------------------------------------------------

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வகுப்புகள் இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை ஹொங்கொங் இந்திய முஸ்லிம் கழகத்தினரும், தமிழ் பண்பாட்டு கழகத்தினரும் இணைந்து ஊக்குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும் இவர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனும் மதப்பேதங்கள் இன்றி, வகுப்புகளில் பொங்கலிட்டு குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழர் கலாச்சார விழுமியங்களைக் காக்கும் விதமாக, அவற்றின் சிறப்பம்சங்கள் குழந்தைகள் மனதில் பதியும் வண்ணம், திருக்குறளும் கற்பிக்கப்படுகின்றது.
ஆண்டு விழா
--------------------------------------------------------------------------

இவ் விழாக்களில் சிறப்புரை, பெற்றோர் கருத்துப்பகிர்வு, ஆசிரியர் உரை, பரிசலிப்பு என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
இவ்வாறு வேற்றுமொழி, வேற்றுக் கலாச்சாரம், வேற்று நாகரீகம் என தமிழரது பண்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் முற்றிலும் வேறுப்பட்ட ஒரு சூழலில் YIFC குழுவினரின் இச்செயல் திட்டம் அனைவரதும் பாராட்டுக்குறியதாகும்.
காணொளி காட்சிகள்
--------------------------------------------------------------------------
தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிகள் சில:
வெளியிணைப்புகள்
--------------------------------------------------------------------------
ஹொங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு அறிக்கைகளை இங்கே பதிவிடபட்டுள்ளதைப் பார்வையிடலாம்.
YIFC குழுவினரின் இணையத்தளம்
Tamil Language and Tamil Teaching
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
No comments:
Post a Comment