முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Wednesday, March 10, 2010

சிங் யீ நிழற்படத் தொகுப்பு (Tsing Yi Images)

சிங் யீ தீவு ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவாகும். இத்தீவு குறித்த விவரணப் பதிவை இங்கே பார்க்கலாம். இத்தீவிற்கு 2009 ஜூன் 28 ஆம் திகதி பயணித்தப் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இங்கே உங்கள் பார்வைக்காக.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.


"Maritime Square" வணிக மையத்தின் நான்காவது மாடியில் சிங் யீ MTR தொடருந்து நிறுத்தகம்


வணிக மையத்தின் ஊடாக இறங்கும் வழியில் ஒரு அழகு உணவகம்.


முதலாம் மாடி ஊடாக வெளியேற்றப் பாதை நோக்கி...


வணிகக் கட்டிடத்தில் இருந்து பேருந்து நிறுத்தகத்திற்கான குறுக்கு நடைப்பாலத்தில்.


எதிரே தெரிவது பேருந்து நிறுத்தகம். நிலமட்டத்தில் இருந்து பல அடிகள் உயரத்தில் பேருந்து நிறுத்தகம்.


பேருந்து நிறுத்தகமும் மாடிமனைகளும்


வானுயர் மாடி மனைகள்


சிங் யீ (Tsing Yi) பேருந்து நிறுத்தகம்


நில மட்டத்தில் பயணிக்கும் பேருந்துகள், பேருந்து நிறுத்தகத்திற்கு வந்தடைவதற்கான பாதை.


பேருந்து நிறுத்தகத்தில் இருந்து கீழ் இறங்கி ஒரு பார்வை. வந்த வழி!


வணிகக் கட்டிடத்தில் இருந்து பேருந்து நிறுத்தகத்திற்கு செல்லும் குறுக்கு நடைப்பாலம்.


எதிரே தெரிவது "சுன் வான்" நகரக் காட்சி.


கவ்லூண் பகுதியில் இருந்து "சிங் யீ" ஊடாகச் செல்லும் தொடருந்து மேம்பாலம்.


உலாச் சாலையும் கடலும்


கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலமும் ச்சுன் வான் பகுதிக் காட்சியும்


விளையாட்டு மைதானமும், வீதியும், ஒரு மாடிமனை கட்டிடத் தொகுதியும்.


மாடிமனைக் கட்டிடம்


உலாச் சாலையும் மேம் பாலங்களும்


அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வீதி


மேம் பாலமும் கீழ் பாதையும்


முசுப்பாற்றும் இருக்கைகளும் உலாச் சாலையும்


முசுப்பாற்றும் இருக்கைகள்


மலை குன்றினை ஊடறுத்துச் செல்லும் மேம்பாலங்கள்


கீழும் மேலும் வாகனங்கள்


மேம்பாலங்களின் நிழலில் வாகனத் தரிப்பிடம்


உயரத்தில் மேம் பாலங்கள்


குன்றின் ஊடே ஊடறுத்துச் செல்லும் சுரங்கப்பாதைக்கான மேம்பாலம்


மேம் பாலங்கள் கடல் மேல்


அகன்ற உலாச்சாலைகள்


முசுப்பாற்றும் கறுங்கல் இருக்கைகளும் உலாச்சாலையும்


மேம்பாலங்கள். எதிரே தெரிவது, தொடருந்து இரட்டை மேம்பாலம்


தொடருந்து இரட்டை மேம் பாலத்தின் மேற்தளத்தில் ஒரு தொடருந்து


தொடருந்து இரட்டை மேம் பாலத்தின், கீழ் தளத்திலும் ஒரு தொடருந்து.எனது பொழுது போக்கு நிழற்படப் பிடிப்பு, இவர்களின் பொழுது போக்கு மீன் பிடிப்பு


கடல் மேல் மேம்பாலம்


கவுலூண் பகுதியைத் தொடும் மேம் பாலம்.


உலாச் சாலையும் அதிபார ஊர்தித் துறையும்


முசுப்பாற்றும் இருக்கையும் அழகு நடைப்பாதையும் அழகு


அழகு அழகு அதனையும் விட, எங்கும் சுத்தமும் பசுமையும் அழகு.


பசுமை மர நிழலும் அதனூடே உலாவுதலும் ஒரு அழகு.


மாடிமனைகளும் முசுப்பாறும் இருக்கைகளும்


மேம்பாலத்தில் பேருந்து, நடைப்பாதையில் இருமருங்கிலும் பசுமை கண்ணுக்கு விருந்து.


மேம் பாலத்தின் கீழ். . .
. . .
ஹொங்கொங் நாட்டில் மாடி மனைகள், மேம் பாலங்கள், நவீன வசதிகள் எல்லாவற்றையும் விட காணும் இடங்கள் எல்லாம் கண்ணுக்கு சுத்தமாக காட்சியளிப்பதே அழகிலும் அழகானது; மனதுக்கு இதமானது. சிங் யீ தீவிலும் அதுவே எனக்கு அழகாகப் பட்டது.

மீண்டும் ஹொங்கொங் நாட்டின் இன்னொரு நகர்வலத்தில் சந்திப்போம்.

நன்றி!
அன்புடன் அருண் HK Arun

4 comments:

பாரதிக்குமார் said...

அருமையான நகர்வலம் . கொள்ளை அழகு - நெய்வேலி பாரதிக்குமார்

பாரதிக்குமார் said...

அருமையான நகர்வலம் . கொள்ளை அழகு - நெய்வேலி பாரதிக்குமார்

HK Arun said...

நன்றி பாரதிக்குமார்

Anonymous said...

வாழ்க வளமுடன்.
தமிழும் ஆங்கீலமும் எழுத, படிக்க, பேச சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நன்கு உதவுகிறது. - பி. செழியன், கரூர்.