புலம்பெயர் நாடுகளில், அந்நிய நாட்டு கலாச்சாரச் சூழ்நிலையில், தம் தாய் மொழியின் சிறப்பு மறந்த ஒரு பெற்றோரின் பிள்ளை வளர்ப்பும், தமிழே தெரியாமல் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், அதனால் ஏற்படும் விளைவையும் இக்குறும்படம் சித்தரிக்கிறது. பேரன் பேத்தியின் பாசத்தைத் தேடும் வயோதிபரின் நடிப்பு, புலம்பெயர் தேசங்களின் இன்றைய எமது சமுதாயத்தின் மனநிலை போன்றவற்றை இக்குறும்படம், படம் பிடித்துக்காட்டுகிறது. மேலும் உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு கூறுங்கள்.
Wednesday, December 26, 2007
Wednesday, November 21, 2007
இராஜராஜச் சோழன்
இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பங்கள் அறிமுகமாகாக் காலத்திலேயே; தமிழரது கட்டிடக்கலை நுட்பமும், கலை நயமும் எவ்வளவு சிறப்புற்றிருந்தது என்பதற்கு இவ்விவரணமே ஒரு சிறந்த சான்றாகும்.
Tuesday, November 20, 2007
விமானத் தரையிறக்கம் - காணொளி
ஹொங்கொங்கில் விமானம் தரையிறங்கும் பொழுது, வானில் இருந்து கண்கள் காணும் காட்சிகளை, இக்காணொளி நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. பின்னனிப் பாடலும் மனதைத் தாலாட்டிச் செல்கின்றது.
Wednesday, November 14, 2007
பன்னாட்டு திருக்குறள் மாநாடு
இந்திய ஜனாதிபதி Dr. AJP அப்துல் கலாம்
அமெரிக்கா வொசிங்டன் நகரில் 2005 யூலை 8-10 ஆம் நாட்களில் நடைப்பெற்ற பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் Dr. AJP அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய சிறப்புரைரையினை இந்தக் காணொளியில் காணலாம்.
அமெரிக்கா வொசிங்டன் நகரில் 2005 யூலை 8-10 ஆம் நாட்களில் நடைப்பெற்ற பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் Dr. AJP அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய சிறப்புரைரையினை இந்தக் காணொளியில் காணலாம்.
Thursday, November 1, 2007
கூகிள் தேடுதளமும் தமிழும்
கடந்த ஆண்டு (2006) கூகிள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட சொல் எது என்று தெரியுமா? Google Top Searches "tamil".
Monday, October 22, 2007
'குப்பி' திரைப்படம்

இத்திரைப்படத்தை கர்நாடக இயக்குநர் ரமேஸ் "சைனைட்" என்ற பெயரில் எடுத்து, பின் அதனை தமிழில் "குப்பி" எனும் பெயரில் மொழி மாற்றி வெளியிட்டுள்ளனர். ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களாக கருதப்படும் ஒற்றைக் கண் சிவராசன், சுபா உற்பட அவர்களுடன் இணைந்து இருந்தவர்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் விதமாக கதை செல்கிறது.
இந்திய சினிமாவுக்கே உரித்தான சினிமா தனம் எதுவுமின்றி, யதார்த்தமாக படம் எடுக்கப்பட்டுள்ளமை இப்படத்தின் சிறப்பாகும்.
பார்க்காதோர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
மேலே இத்திரைப்படத்தைக் காணமுடியாதவர்கள் இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.
Tuesday, October 16, 2007
செருப்பு (குறும்படம்)
இராணுவப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு பிரதேசம். அங்கே மீள் குடியேறும் மக்கள். அவர்கள் நிலங்களில் எல்லாம் கால் வைக்கமுடியாதப் படி கண்ட இடங்களிலெல்லாம் விதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள். யுத்தத்தால் அனைத்தையும் இழந்து, தொழில் வாய்ப்புமின்றி, யுத்தத்தின் கோரப்பிடிக்குள்ளும் வறுமைப் பிடிக்குள்ளும் சிக்குண்டு அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலம். இந்தப் பின்னனியுடன் தொடர்கிறது கதை.
சக மாணவ மாணவிகளைப் பார்த்து தனக்குமொரு சோடி செருப்பு வேண்டித்தரும் படி கூறும் மகள். வறுமை பிடிக்குள்ளும் தனது மகளுக்காக உழைத்து செருப்பு வேண்டிவரும் தகப்பன். கடைசியில் செருப்பு வேண்டி வருவதை அறிந்து ஆசையுடன் தந்தையிடம் ஓடும் மகளை, காணியில் புதையுண்டுக் கிடந்த நிலக் கண்ணிவெடி பதம் பார்க்கிறது.
காலையிழந்து செருப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடையும் சிறுமியின் நடிப்பு மனதை நெகிழவைக்கின்றது.
பகுதி 1
பகுதி 2

தமிழ் சிங்களத் திரைப்படம்
"ஏ நைன் பாதை" இது ஏ 9 பாதை திறக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட திரைப்படம். சிங்களத் தமிழ் இருமொழி திரைப்படம். இத்திரைப்படத்தில் தமிழர் பாத்திரங்களுக்கு தமிழர்களும், சிங்கள பாத்திரங்களுக்கு சிங்களவர்களும், முஸ்லீம் பாத்திரங்களுக்கு முஸ்லீம்களுமாக முவ்வினத்தவரும் ஒன்றாக நடித்திருப்பது சிறப்பாக அமைந்திருக்கிறது. திரைப்படத்தின் நடிப்பு இந்திய சினிமா சாயலற்று, யதார்த்தமாக உள்ளது. ஆனால் திரைப்படத்தின் மூலக்கதை சிங்கள பக்கச் சார்புடையதாகவே உள்ளது.
போரின் கோரப்பிடிக்குள் உடைந்து சிதைந்து போயிள்ள கட்டிட எச்சங்களை அருமையாகக் காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளனர். அவற்றைப் பார்க்கும் போது எமது மனமும் உடைந்து சிதைந்து போகின்றது.
மேலும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்கள்.
இங்கே இப்படத்தை காணமுடியவில்லையெனில் கீழுள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
http://video.google.com/videoplay?docid=8140779693628308422&hl=en

Subscribe to:
Posts (Atom)