முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம் கற்போம்

Friday, February 19, 2010

ஹொங்கொங் த.ப.க காணொளிகள்

ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றது. இக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின், காணொளி காட்சிகள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு இட்டுவைக்கின்றேன். எண்ணிக்கையில் மிகவும் குறைவான தமிழர்களே ஹொங்கொங்கில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை ஒரு கடுகெதி ஓட்ட வாழ்க்கை என்றே கூறவேண்டும். இக்கடுகெதி ஓட்ட வாழ்க்கை புறச்சூழலிலும் தம் தாய் மொழி, பண்பாடு, கலை போன்றவற்றை மறவாது, அவற்றை பேணிப் பாதுகாக்கும் முகமாக நடாத்தப்பட்டு வரும், தமிழ் பண்பாட்டு நிகழ்வுகள் வரலாற்று தடங்கள் ஆகும்.

இனி காணொளிகளைப் பாருங்கள்.

ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு காணொளி விவரணம்.ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் நிகழ்த்தப்பட்ட "நீயா நானா" நிகழ்வு.ஹொங்கொங்கில் கணேஸ் குமரேஸ் அவர்களின் வயலின் வாசிப்பு நிகழ்வு.ஹொங்கொங்கில் லேனா தமிழ்வாணன், "அனைவருடனும் நல்லுறவு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை.ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடாத்திய "குழந்தைகள் தினம்" நிகழ்வு காணொளிக் காட்சிகள்.

இவை வெறும் பொழுதுப் போக்கு நிகழ்வுகளாக மட்டுமே அன்றி, எம் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முன்னெடுப்புகளாகவே நான் பார்க்கின்றேன். உண்மையில் புலம் பெயர் தேசங்களில் எம்மொழி சிதைந்து வரும் இக்காலச்சூழமைவில் இவை மனதுக்கு மகிழ்வான நிகழ்வுகளாக உள்ளன.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

No comments: